டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்.. அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட கடுமையான நில அதிர்வு, சுமார் 15 நொடிகளுக்கு நீடித்த‌தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-10 09:50 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று காலை 9.04 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது. மேலும் அரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்