காதலியுடன் நேரம் செலவிட மாணவர் செய்த செயல்; விடுதி வாசலில் சிக்கிய சூட்கேஸ் - வீடியோ

காதலியை சூட்கேசில் மறைத்து விடுதி அறைக்கு கொண்டு செல்ல முயன்ற மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-04-12 14:59 IST

சண்டிகர்,

அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் விடுதிக்குள் ஒரு பெரிய சூட்கேஸை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

அந்த சூட்கேசில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டதால் விடுதி காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அந்த மாணவரை நிறுத்தி சூட்கேஸை சோதனை செய்தனர். அப்போது அதற்குள் இருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்தார்.

அந்த பெண் சம்பந்தப்பட்ட மாணவரின் காதலி என்பதும், காதலியுடன் நேரம் செலவிடுவதற்காக அவரை சூட்கேசில் மறைத்து வைத்து தனது விடுதி அறைக்கு மாணவர் கொண்டு செல்ல முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த மாணவர்கள் சிலர் தங்கள் மொபைல் போனில் படம்பிடித்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், தங்கள் கல்லூரியில் கடுமையான காவல் மற்றும் சோதனைகள் இருப்பதாகவும், மாணவர்கள் சில நேரம் விளையாட்டுத் தனமாக ஏதாவது செய்துவிடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், காதலர்கள் சிறிது நேரம் தனிமையில் இருப்பதற்கு கூட நமது நாட்டில் இவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்