ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய காஷ்மீர் சிறுவன்; அதிர்ச்சி சம்பவம்
சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தின் பல்வேறு நிலைகள் உள்ளன. இந்நிலையில், பஞ்சாப்பில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை காஷ்மீரை சேர்ந்த சிறுவன் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அனுப்பியுள்ளான்.
15 வயதான அந்த சிறுவன் காஷ்மீரின் பரி பர்மனா பகுதியை சேர்ந்தவன் ஆவான். அந்த சிறுவன் பஞ்சாப்பின் பதான்கோட் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள், ராணுவ கட்டமைப்புகளை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அந்த வீடியோவை பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு அனுப்பியுள்ளான். சிறுவனின் செல்போனில் உளவு செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.
சிறுவன் தனது செல்போனில் எடுக்கும் வீடியோக்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு பகிரப்பட்டுள்ளன. மேலும், சிறுவனின் செல்போன் எண் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளது. இதையடுத்து, சிறுவனை கைது செய்த பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.