டி.வி., செல்போன் விலை மேலும் உயர வாய்ப்பு

விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10–12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது;

Update:2026-01-17 17:52 IST

Photo Credit: PTI

புதுடெல்லி, 

டி.வி., மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அடுத்த இரண்டு மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மைக்ரோசிப்களின் பற்றாக்குறை, அதன் விளைவாக அவற்றின் விலை உயர்வு மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அதிகமாக ஏற்றுக்கொள்வது ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன. மைக்ரோசிப்களின் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையாக உள்ளது.

கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் விலைகள் 120 சதவீதம் வரை அதிகரிக்கும். இதன் காரணமாக டி.வி. மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்க கட்டாயப்படுத்தப்படும். இந்த விளைவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அதனால்தான் பல நிறுவனங்கள் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை குறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10–12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்