இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025

Update:2025-02-06 09:15 IST
Live Updates - Page 2
2025-02-06 07:02 GMT

ஆர்.எஸ்.எஸ் நோக்கம் நிறைவேறாது: ராகுல் காந்தி

யுஜிசி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:

ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமிக்க முயற்சி நடைபெறுகிறது. கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். ஆர்.எஸ்.எஸ்சின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது”  எனப்பேசினார்.

2025-02-06 06:18 GMT

 திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி, அகி​லேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

2025-02-06 05:39 GMT

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டதாக குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.

2025-02-06 04:14 GMT

தங்கம் விலை புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,930 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.107 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-02-06 03:58 GMT

பாதாள சாக்கடையில் விழுந்த குழந்தை - அதிர்ச்சி

குஜராத்தில் பாதாள சாக்கடை கால்வாயில் விழுந்த 2வயது குழந்தையை தேடும் பணிகள் தீவிரம்

150 மீட்டர் வரை தேடிப்பார்த்தும் சிறுவனை மீட்க முடியவில்லை என போலீசார் தகவல்

2025-02-06 03:48 GMT

*தமிழகத்தில் வெளியானது "விடாமுயற்சி" திரைப்படம்

*மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள"விடாமுயற்சி" திரைப்படம் தமிழகத்தில் வெளியானது

Tags:    

மேலும் செய்திகள்