சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல் பார்க் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட வீரர்கள் இணைந்து இன்று காலை சென்றபோது, நக்சலைட்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனை தொடர்ந்து, வீரர்களும் பதிலடியாக அவர்களை நோக்கி சுட்டனர். இந்த சண்டையில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கை ஒட்டி நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் தார்வாட் நகரில் வீடுகளுக்கு நேரடி இணைப்பு வழங்கும் கேஸ் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுத்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்ய பிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரிய தலைவராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வஞ்சிப்பது பாஜக அரசின் பழக்கம், அதையும் எதிர்கொண்டு தமிழ்நாட்டை வாழ வைப்பது திமுக அரசின் வழக்கம். தமிழ்நாட்டில் பாஜவினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விஜய் நாலுக்கு நாலு சுவற்றுக்குள் அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறைக்கு எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக அச்சுறுத்த துவங்கியதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர். இது உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்திய வரலாற்றில், எந்த மத்திய அரசும், அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு கொடூரமாக இருந்தது இல்லை. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீது அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பா.ஜ., தன்னை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
*வேலூரில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
*சீட்டு பணத்தைப் பெற வேலூர் வந்தபோது, விடுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை என பாதிக்கப்பட்ட பெண் புகார்
*வேலூர் எஸ்பி உத்தரவின் பேரில் 6 பேர் மீது மகளிர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை