திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. வங்கி கணக்கில் இருந்து ரூ. 56 லட்சம் திருட்டு - அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி.;

Update:2025-11-07 17:21 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி. இவருக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு கிளையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு உள்ளது. அந்த வங்கிக்கணக்கில் கல்யாண் பானர்ஜி ரூ. 56 லட்சம் இருப்பு வைத்திருந்தார்.

இந்நிலையில், கல்யாண் பானர்ஜியின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ. 56 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் கல்யாணின் வங்கிக்கணக்கிற்குள் நுழைந்து அதில் இருந்த ரூ. 56 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்