உ.பி. கொடூரம்: மாமியார் மீது காதல்; இளம் மனைவி படுகொலை... ஆபாச புகைப்படங்களால் சிக்கிய கணவர்
ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.;
காஸ்கஞ்ச்,
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டட்ததில் நாக்ளா பார்சி கிராமத்தில் வசித்து வருபவர் பிரமோத். இவருடைய மனைவி ஷிவானி (வயது 20). இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி, சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இதனை அறிந்த ஷிவானி அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதனால், கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், அதனை அவர் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஷிவானியின் உறவினர்களும் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வீட்டின் வராண்டாவில் ஷிவானி உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதனை கவனித்த ஷிவானியின் மாமா போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு என பரவலாக புரளி பரவிய நிலையில், அது உண்மை என நிரூபிக்கும் வகையில், இந்த ஆபாச புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.