அமெரிக்காவின் 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்பு என்ன? நாளை முக்கிய ஆலோசனை
பிரதமர் அலுவலகம் ஏற்பாட்டில் முக்கிய உயரதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.;
ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. ஆனாலும் இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது.
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியானது நாளை மறுநாள் அதாவது வரும் 27 ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து ஆலோசிக்க நாளை முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
உயர் வரிவிதிப்பின் தாக்கத்தை எதிர்கொள்ளும் இந்திய ஏற்றுமதியாளர்கள் உடன் பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமரின் முதன்மை செயலாளர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.