ஓட்டலில் அறை எடுத்த மனைவி... போலீசாருடன் புகுந்த கணவன்; கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலன்
அந்த பெண் போலீசாரிடம், கணவருடன் வாழ விரும்பவில்லை. அவர் ஒரு முடிந்து போன அத்தியாயம் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.;
ஜான்சி,
கணவர் இருக்கும்போது கள்ளக்காதலன் உடன் ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கிய மனைவியை போலீசாருடன் சென்று கணவன் பிடித்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் நவபாத் பகுதியில் பேருந்து நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், மனைவி கள்ளக்காதலன் உடன் பல இடங்களில் சுற்றி திரிகிறார் என தெரிந்து அதிர்ந்த கணவன் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்து வந்திருக்கிறார்.
கடந்த 11-ந்தேதி மனைவி, கள்ளக்காதலனுடன் ஓட்டலுக்கு செல்கிறார் என்ற ரகசிய தகவல் கணவருக்கு கிடைத்து, அவர்களை அவர் பின்தொடர்ந்து சென்றார்.
அவர்கள் ஓட்டலில் நுழைந்ததும் நிலைமை பெரிய அளவில் மோசமடைய போகிறது என உணர்ந்து, உடனடியாக போலீசாரின் 112 என்ற அவசரகால உதவி எண்ணை தொடர்பு கொண்டார். அவர்கள் வந்த பின்னர் ஓட்டலின் 103-ம் எண் கொண்ட அறைக்கு சென்றார்.
அறையின் கதவை போலீசார் உதவியுடன் திறந்ததும், உள்ளே இருந்த மனைவிக்கும் கள்ளக்காதலனுக்கும் பதற்றம் தொற்றி கொண்டது. கள்ளக்காதலன் கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கி கொண்டார்.
ஓட்டலில் காரசார வாக்குவாதம் நடந்தது. ஓட்டல் ஊழியர்கள், பக்கத்து அறைகளில் தங்கியவர்கள் என பலரும் ஒன்று கூடி விட்டனர். அப்போது, தனியாக போலீசாருடன் கத்தி கொண்டிருந்த மனைவி, கட்டிலுக்கு அடியில் இருந்த கள்ளக்காதலனை இழுத்து, வெளியே வர செய்துள்ளார். இதனை பார்த்து வெளியே நின்றவர்கள் அதிர்ந்து விட்டனர்.
அப்போது அந்த பெண், 2 ஆண்டுகளாக கணவருடன் நான் வாழவில்லை. அவர் ஒரு முடிந்து போன அத்தியாயம் என கூறியுள்ளார்.
ஓட்டலுக்கு சொந்த விருப்பத்தின்பேரிலேயே வந்தேன் என்றும் கள்ளக்காதலனுடன் வாழவே விருப்பம் என்றும் அது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்று கூறியதுடன், போலீசிடம் விவாகரத்து கோர தயார் என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்த தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சிறிது காலத்திலேயே இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டு, கோர்ட்டு வரை சென்றனர். கோர்ட்டு மத்தியஸ்தம் செய்த பின்னர், சிப்ரி பஜாரில் உள்ள மனைவியின் மாமா வீட்டில் தங்கியுள்ளனர். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை.
இதுபற்றி கணவர் கூறும்போது, ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கிறோம். இதில் பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்த மனைவி மற்றொரு நபருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட தனிப்பட்ட முறையில் எவ்வளவோ முயற்சித்தும் அதில் பலனில்லை என கணவர் கூறினார். விவாகரத்துக்கு சம்மதிக்க ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என மனைவி மிரட்டுகிறார் என கணவர் வருத்தத்துடன் கூறினார்.
இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது என கூறிய அவர், போலீசாரிடம் நடவடிக்கை கோரி புகார் அளித்து வந்திருக்கிறார். அவசரகால அழைப்பின்பேரில் ஓட்டலுக்கு போலீசார் சென்ற விவரங்களை நவபாத் காவல் நிலைய அதிகாரி ரவி ஸ்ரீவஸ்தவா உறுதிப்படுத்தி உள்ளார். தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
அனைத்து உண்மைகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருமணம் செய்து விட்டு, தனிப்பட்ட விருப்பம் என ஏதேதோ காரணம் கூறி விவாகரத்து கோருவதுடன், கணவரை பிரிவதுடன், அவரிடம் இருந்து பணம், சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் மனைவி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.