மராட்டியம்: சாலை விபத்தில் 5 பேர் பலி

விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மொஹோல் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.;

Update:2026-01-18 12:58 IST

புனே,

மராட்டியத்தின் பான்வெல் நகரில் இருந்து அக்கல்கோட் நோக்கி சிலர் கார் ஒன்றில் சென்றனர். சாமி கும்பிடுவதற்காக சென்ற அவர்களின் கார் நேற்றிரவு 11 மணியளவில் சோலாப்பூர்-புனே தேசிய நெடுஞ்சாலையில் மொஹோல் பகுதியருகே சென்றபோது, விபத்தில் சிக்கியது. காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில், கார் சாலையோர மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பலியானார்கள். பெண் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் சிகிச்சைக்காக மொஹோல் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்