கர்நாடகாவில் சோகம்; ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் பலி

ஒருவர் சிக்கஜாலா பகுதியை சேர்ந்தவர். மற்ற 2 நண்பர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.;

Update:2026-01-18 09:35 IST

பெங்களூரு,

கர்நாடகாவின் தேவனஹள்ளி நகரில் அகலகோட் கிராமம் அருகே மாநில நெடுஞ்சாலையில் இளைஞர்கள் 3 பேர் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அவர்கள் தேவனஹள்ளியில் இருந்து புடிகெரே சாலையை நோக்கி சென்றபோது, விரைவாக எதிரே வந்த லாரி ஒன்று அவர்களின் பைக் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து லாரியில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயற்சித்தனர். ஓட்டுநர்களின் அலட்சியத்தினால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என அவர்கள் தெரிவித்தனர்.

இதில் உயிரிழந்த நபரில் ஒருவர் தவுசீப் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் சிக்கஜாலா பகுதியை சேர்ந்தவர். அவருடைய மற்ற 2 நண்பர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தேவனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்