பள்ளி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளம்பெண்

இளம்பெண்ணுடன் பிளஸ்-1 மாணவன் ஒருவரும் திருட முயன்றுள்ளது தெரியவந்தது.;

Update:2025-09-03 08:49 IST

ஜபல்பூர்,

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஜன்ஜீவன் நகர் பகுதியில் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் உடைக்க முயன்றுள்ளார். ஆனால் உடைக்க முடியாததால் சென்று விட்டார். இதற்கிடையே கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட 24 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடன் பிளஸ்-1 மாணவன் ஒருவரும் திருட முயன்றுள்ளது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

இளம்பெண்ணின் தங்கை மகனான அந்த மாணவனை பள்ளி கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டனர். பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை அந்த பெண் உடைக்க முயன்றதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்