கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி சுபா பாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.;

Update:2025-04-14 08:35 IST

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மங்கரா அடுத்த மஞ்சக்கரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவருடைய மனைவி சுபா பாய் (வயது 50). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தனியாக இருந்த போது, சமையலறையில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது மின்சாரம் தாக்கி சுபா பாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் மின் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் கசிந்து, கிரைண்டரில் மாவு அரைத்த சுபா பாயை தாக்கியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்