ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த பெண்: நொடிப்பொழுதில் காவலர் செய்த செயல் - வைரல் வீடியோ

துரிதமாக செயல்பட்டு பெண்னை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப்படை காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.;

Update:2025-03-09 16:24 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் போரிவலி ரெயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த ரெயில் நிற்பதற்குள் பெண் ஒருவர் ரெயிலில் இருந்து இறங்க முற்பட்டார். அப்போது நிலைதவறிய அந்த பெண், ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே கீழே விழுந்தார். 

இதனை கவனித்த ரெயில்வே பாதுகாப்புப்படை காவலர், துரிதமுடன் செயல்பட்டு அந்த பெண்ணை நடைமேடைக்கு இழுத்து காப்பாற்றினார். இதனால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். துரிதமாக செயல்பட்டு பெண்னை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப்படை காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்