மாதத்தில் பாதி நாள் கணவருடன், மீதி நாள் காதலனுடன் செல்ல விரும்பிய பெண்

ஓராண்டில் மட்டும் 10 முறை கள்ளக்காதலனுடன் தலைமறைவானார்.;

Update:2025-08-28 16:45 IST

லக்னோ,

"கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்" என்று வாழ்ந்த காலம் மலையேறிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள ராம்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகு அந்த இளம்பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

அடிக்கடி அவருடன் செல்போனில் பேசிவந்தார். கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்தார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் கணவருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மனைவியை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. கணவனுடன் சண்டை போட்டால் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து விடுவார். இப்படி, ஓராண்டில் மட்டும் 10 முறை கள்ளக்காதலனுடன் தலைமறைவானார்.

ஒவ்வொரு முறை குடும்பத்தார் தேடிப்பிடித்து அந்த இளம்பெண்ணை மீட்டு வந்தாலும் அவருக்கு கள்ளக்காதல்தான் இனித்தது. ஒரு கட்டத்தில் பிரச்சினை பெரிதாகவே கணவன் வீட்டார் கிராம பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். பஞ்சாயத்து நிர்வாகிகள் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

ஆனால், அவர் எதற்கும் பயப்படவில்லை. மாறாக, அவரே தனது விருப்பத்தை ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கூறினார். இதனை கேட்டு ஊரார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அப்படி என்னதான் அந்த இளம்பெண் கூறினார் என்றால், மாதத்தில் கணவருடன் பாதி நாள், காதலனுடன் மீதி நாள் வாழ விரும்புவதாக தெரிவித்தார்.

பஞ்சாயத்து நிர்வாகிகள் எவ்வளவு எடுத்து சொல்லியும் அந்த பெண் கேட்பதாக இல்லை. தனது முடிவில் ஒற்றைக்காலில் நின்றார். மனைவியின் முடிவை கேட்டு கணவர் அழுது துடித்தார். கெஞ்சியும் பார்த்தார். ஆனால், எதற்கும் அந்த இளம்பெண் மனம் இறங்கி வரவில்லை.

ஒரு கட்டத்தில், இனி எதுவும் நடக்காது என்று தெரிந்த நிலையில், பஞ்சாயத்தார் முன்னிலையில் மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிவைத்துவிட்டு சோகத்துடன் கணவர் வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்