தலாய்லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு தகவல்
திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமாவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. .இந்தியாவில் உள்ள திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவி தலாய் லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, அவருக்கு சிஆர்பிஎப் படையினரால் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவெடுத்திருப்பதக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தலாய் லாமாவுக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 30 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது