கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நாளை முதல் அனுமதி

தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2024-05-26 15:20 GMT

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தேனி மாவட்டமே குளு, குளுவென மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி, 'சின்னச்சுருளி' என்றழைக்கப்படும் மேகமலை ஆகிய 3 அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் கடந்த வாரம் 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கும்பக்கரை அருவியை பொறுத்தமட்டில் வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நாளை (மே 27) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை முடிவடைந்துள்ளதால், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதியளித்து பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்