வேதாரண்யம் தாலுகாவிற்கு 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை

அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.;

Update:2025-03-08 20:49 IST

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வருகிற 10ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்