தண்ணீர் நிறைந்த அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

கால் தவறி தண்ணீர் நிறைந்த அண்டாவுக்குள் விழுந்த குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது.;

Update:2025-05-28 12:59 IST

கோப்புப்படம் 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் என்.என்.ஆர். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் நித்யா (2 வயது). நேற்று காலை என்.என்.ஆர். கண்டிகை இருளர் காலனியில் தனது தாயுடன் குழந்தை நித்யா இருந்தார். மாம்பழம் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக குழந்தை நித்யா தண்ணீர் நிறைந்த ஸ்டீல் அண்டாவில் எட்டி பார்த்தார்.

அப்போது கால் தவறி தண்ணீர் நிறைந்த அண்டாவுக்குள் விழுந்த குழந்தை நித்யா மூச்சு திணறி மயங்கியது. உடனடியாக குழந்தையை வங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்