சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்
மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேந்திரன் மீனம்பாக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;
சென்னை,
சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சென்னையில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜபல் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காயத்ரி வேப்பேரிக்கும், உளவுப்பிரிவு உதவி கமிஷனர் சங்கரநாராயணன் அமலாக்கப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பரங்கிமலை உதவி கமிஷனர் முரளி செம்பியத்துக்கும், மீனம்பாக்கம் உதவி கமிஷனர் முகேஷ் ஜெயகுமார் கிண்டிக்கும், தரமணி உதவி கமிஷனர் சங்கு மத்திய குற்றப்பிரிவுக்கும், செம்பியம் உதவி கமிஷனர் பசுபதி பரங்கிமலைக்கும், உளவுப்பிரிவு உதவி கமிஷனர் அகமது அப்துல் காதர் ஐகோர்ட்டுக்கும், மயிலாப்பூர் உதவி கமிஷனர் சீனிவாசன் உளவுப்பிரிவுக்கும்,
கிண்டி உதவி கமிஷனர் விஜயராமுலு குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதி ராஜன் உளவுப்பிரிவுக்கும், கொளத்தூர் உதவி கமிஷனர் செந்தில்குமார் தரமணிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மணிமேகலை கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனராகவும், கோயம்பேடு உதவி கமிஷனர் சரவணன் எம்.கே.பி. நகருக்கும்,
மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேந்திரன் மீனம்பாக்கத்துக்கும், புழல் உதவி கமிஷனர் சத்யன் கோயம்பேடுக்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பால் ஸ்டீபன் திருமங்கலத்துக்கும், விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ணா பிரபு மயிலாடுதுறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.