போத்தனூர்- செங்கோட்டை இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.;
திருச்சி,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் போத்தனூரில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06115) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, கல்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக மறு நாள் (15-ந்தேதி) காலை 11.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் திருச்சிக்கு அதிகாலை 5.30 மணிக்கு வந்து 5.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை- போத்தனூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06166) செங்கோட்டையில் இருந்து வருகிற 15-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறு நாள் (16-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரெயில் திருச்சிக்கு அதிகாலை 3.50 மணிக்கு வந்து 3.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்களில் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 7 பெட்டிகள், மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கூடுதல் படுக்கைகள் கொண்ட 4 பெட்டிகள், படுக்கை வசதிகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 7 இணைக்கப்பட்டு இருக்கும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.