வாலிபரை மதுபாட்டிலால் தாக்கி கொலை முயற்சி: 2 பேர் கைது

நெல்லை மாநகர பகுதியில் வாலிபர் ஒருவரும், மேலும் சிலரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.;

Update:2026-01-11 07:03 IST

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், சிதம்பரம்நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்னுமணி (வயது 28) மற்றும் சுபாஷ், இசக்கிபாண்டி, செல்வம், இசக்கிதுரை, ராஜா, மகாராஜன் மற்றும் பிரபாகரன்(எ) பிரபா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பொன்னுமணியை, அவதூறு வார்த்தைகளால் பேசி, மது பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் பொன்னுமணி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களில் தாழையூத்து, மேலவாசல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிதுரை(எ) கட்டதுரை, வல்லநாடு ரெட்டியார் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிரபாகரன்(எ) பிரபா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்