திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-05-30 21:40 IST

கோப்புப்படம்

திருச்சி,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக அரியமங்கலம் மலையப்பநகரை சேர்ந்த மனோகர் (வயது 70), திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் காவியதர்சன் (20), குவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மருதை மகன் ஜெய அயனந்த் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்