தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் 3 ‘டி.வி.கே.’ - விஜய் கட்சியினர் அதிர்ச்சி

மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.;

Update:2025-11-21 10:25 IST

சென்னை,

தமிழக அரசியலில் ஒரு எழுத்து பஞ்சாயத்து என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதியதாக கட்சி தொடங்குபவர்கள் ஏற்கனவே இருக்கும் பிரபலமான கட்சியின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் முன்னே, பின்னே, நடுவிலோ மாற்றியோ அல்லது சேர்த்தோ புதிய கட்சியை தொடங்கி விடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில், ம.தி.மு.க.வில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியிருக்கிற மல்லை சத்யா தனது கட்சிக்கு திராவிட வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். சுருக்கமாக தி.வெ.க., ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பில் டி.வி.கே. என்று வருகிறது.

விஜய் கட்சியை த.வெ.க., டி.வி.கே. என்று தொண்டர்கள் அழைத்து வரும் நிலையில், மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக த.வெ.க.வினர் தெரிவிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முன்பாக அரசியல் கட்சி தொடங்கிய வேல்முருகனின் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியும் த.வா.க. எனவும் ஆங்கிலத்தில் டி.வி.கே. (TVK) என்று தான் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசியலில் 3 டி.வி.கே. தேர்தலில் களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது. குழப்பம் மக்களுக்கு தான்.

Tags:    

மேலும் செய்திகள்