திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 நைஜீரியர்கள் கைது

விசா காலம் முடிந்த பின்பும் திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்து பனியன் கொள்முதல் செய்து நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.;

Update:2025-06-28 21:19 IST

திருப்பூர்,

திருப்பூரில் சட்டவிரோதமாக சிலர் தங்கியிருப்பதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது நீலிப்பிரிவு பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 5 பேரை பிடித்தனர்.

அவர்களிடன் போலீசார் நடத்தி விசாரணையில் அவர்கள் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் எனவும் விசா காலம் முடிந்த பின்பும் திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்து பனியன் கொள்முதல் செய்து நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்துவந்ததாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்த சிகேசி, சின்வேபாலினஸ், ஆண்ட்ரூ உகோச்சுக்வு, வின்சென்ட், அந்தோணி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்