கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் போலீசாரை மிரட்டிய 7 பேர் கைது

கோவில்பட்டி பகுதியில் வாலிபர்கள் சிலர் கையில் வாள், அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update:2025-10-25 08:48 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் மேல காலனி அருகே கடந்த 21ம் தேதி வாலிபர்கள் சிலர் கையில் வாள், அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு நின்று கொண்டிருந்த தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சேர்ந்த மங்களராஜ் மகன் மாதவன் (வயது 20), கோவில்பட்டி மேட்டுத் தெரு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக்(20), கூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார்(28) ஆகியோர் கையில் ஆயுதங்களுடன் நின்று அவதூறாகப் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். மேலும் 4 பேர் இவர்களிடமிருந்து ஆயுதங்களை மாறி மாறி கையில் வாங்கி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருருந்தனர்.

போலீசாரை கண்டதும் அவர்களையும் அவதூறாகப் பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததையடுத்து, போலீசார் 7 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன், செல்வகுமார், கார்த்திக், எட்டயாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மதன்(23), கூசாலிபட்டி மேட்டுத் தெரு காலனியைச் சேர்ந்த ராஜ் மகன் கமலேஷ்(18), ராஜா மகன் கஜேந்திரன்(20), அதே பகுதி சாந்திநகரைச் சேர்ந்த பாலகுமார் மகன் மகேஷ்குமார்(18) ஆகிய 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்