பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்

ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.;

Update:2025-02-22 08:18 IST

சென்னை,

சென்னை அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர். தற்போது இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார்கள். ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன்,7 திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்ததை போலீசாரிடம் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். 7 வீடுகளில் கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை போட்டதாகவும் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்