தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-08-29 14:27 IST

சென்னை,

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு: 

*சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம்

*சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனிஷா உசேன் நியமனம்

*சென்னை கிழக்கு இணை ஆணையர் விஜயகுமார் பணியிட மாற்றம்

*கிழக்கு காவல்துறை இணை ஆணையராக பண்டி கங்காதர் நியமனம்

*சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக விஜயகுமார் நியமனம்

* சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்

* சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக சுகாஷினி ஐபிஎஸ் நியமனம்

*காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக பி.எச்.ஷாஜிதா  நியமனம்.

 *கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக திவ்யா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்