தடபுடலாக தயாராகும் விருந்து.. தி.மு.க. பொதுக்குழுவில் சைவ, அசைவ உணவுகளின் பட்டியல்

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-05-31 17:37 IST

மதுரை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். பின்னர் மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்துார் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி., டி.ஆர்., பாலு, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மாலை முதல்-அமைச்சர் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற இருக்கிறது. முடிவில், முன்னாள் மேயர் முத்து சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் மதுரையில் நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தயாராகி வரும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் குறித்த முழு விவரமும் வெளியாகி இருக்கிறது.

சைவம்

சைவத்தை பொறுத்தவரை குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர்பா, கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரகறி, செளசெள கூட்டு, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் பிரை, வெண்டைக்காய் பிரை, காளிபிளவர் சில்லி, வெஜ் கட்லட், சாஸ், பருப்பு வடை, சப்பாத்தி, காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, வெள்ளை சாதம், பருப்பு பொடி, நெய், சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய், காரக்குழம்பு, தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், தயிர், இஞ்சி புளி ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அசைவம்

அசைவத்தை பொறுத்தவரை பன் அல்வா, மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் காடி சாப்ஸ், மட்டன் உப்புக்கறி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சரமீன் வறுவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, தயிர் வெங்காயம், சாதம், எலும்பு தால்சா, அயிரை மீன் குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், ஜிகர்தண்டா, ஐஸ் க்ரீம், பீடா, வாழைப்பழம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

மேலும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட சாப்பாடு அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்