பஸ் நிலையத்தில் கண்டக்டரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தவச்செல்வத்தை மானாமதுரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருடைய மகன் தவச்செல்வம் (வயது 23). இவர் மதுரையில் இருந்து இளையான்குடி செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அவர் மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது, அடையாளம் தெரியாத 3 பேர் தவச்செல்வத்தை பஸ் நிலையத்தில் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதை பார்த்த பயணிகள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தவச்செல்வத்தை மானாமதுரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.