கடலூரில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து - சின்னத்திரை நடிகர் உயிரிழப்பு

பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பேரரசு பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2025-11-08 13:29 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சீரங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பேரரசு(வயது 21). சின்னத்திரை நடிகரும், உதவி இயக்குநருமான இவர், ‘உப்பு புளி காரம்’ சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர். இவர் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்காக சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

இன்று காலை பண்ருட்டி அருகே ஆண்டிகுப்பம் சாலையில் பேரரசு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பேரரசு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பேரரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்