ஓசூர் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த யானைக் கூட்டம் - கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் புகுந்துள்ளன. இந்த யானைக் கூட்டம் ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளன. இதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
உணவு, தண்ணீர் தேடி யானைகள் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும், யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே சமயம், வனப்பகுதி அருகே உள்ள விளைநிலங்களில் நெல் மற்றும் ராகி பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அவற்றை யானைகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.