அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.25,000 அபராதம் விதித்தனர்.;

Update:2025-04-26 13:36 IST

திருப்பூர்,

திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெயில் நிலையம் அருகே 25.04.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கீதம்சிங் (39) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 4.400 கி.கிராம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவருக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்