சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாஞ்சோலையில் அதிகாரிகள் குழு ஆய்வு

மாஞ்சோலையில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.;

Update:2025-04-10 16:00 IST

நெல்லை,

நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு கையகப்படுத்தி மீண்டும் வனப்பரப்பாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இங்கு, வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அகஸ்தியர் மலைப்பகுதியில் வனத்தை தவிர வேறு பயிர் சாகுபடி, தோட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கிறதா? என்பதை குழு அமைத்து ஆய்வு செய்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலையில் இன்று ஆய்வு நடைபெறுகிறது. இதன்படி, மாஞ்சோலை வனப்பகுதியில் தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்