சென்னையில் கணவரை இழந்த பெண்ணிடம் வீடு புகுந்து அத்துமீறல் - இளைஞர் கோர்ட்டில் சரண்

காயமடைந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.;

Update:2025-06-04 16:37 IST

சென்னை,

சென்னை நொளம்பூர் பகுதியில், கணவரை இழந்த பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, அப்பெண்ணிடம் அத்துமீற முயற்சி செய்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண், சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார்.

இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், அந்த இளைஞர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் காயமடைந்த அப்பெண், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இது குறித்து அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்து, தலைமறைவாக இருந்த முகேஷ் என்ற இளைஞர் அம்பத்தூர் கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து முகேஷை கைது செய்த திருமங்கலம் போலீசார், அவர் இதுபோல் வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்