கள்ளக்காதலி பிரிந்து சென்றதால்... வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
இவருடைய மனைவி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.;
கோப்புப்படம்
ஈரோடு,
ஈரோடு எலவமலை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 30). இவருடைய மனைவி பிரசவத்திற்காக ஜெயம்கொண்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் சேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சேகர், தனது கள்ளக்காதலியுடன் பெரியசேமூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனமுடைந்த சேகர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சேகர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.