வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.;

Update:2025-07-19 05:53 IST

திருப்பூர்,

திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமாத்தாள் (வயது 65). இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் புகுந்தார். மேலும் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் அதே பகுதியில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டியின் நகையை பாலமுருகன் பறித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்