அ.தி.மு.க. மாநிலங்களவை புதிய உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து

உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை காண்பித்து, எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.;

Update:2025-06-13 17:34 IST

சென்னை,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (13.6.2025 – வெள்ளிக் கிழமை), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவருமான ம. தனபால், ஆகியோர் நேரில் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை காண்பித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்