அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி - எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் எவ்வளவு அவதாரம் எடுத்து நாடகத்தை அரங்கேற்றினாலும், மக்கள் நம்பப்போவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2025-07-24 19:49 IST

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ' மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தேர்தலுக்கு முன்பு அளித்த பல வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. பாஜக உடன் இபிஎஸ் எப்படி கூட்டணி வைக்கலாம் என திமுகவினர் கேட்கின்றனர். அதிமுக நமது கட்சி. யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். இவர்களுக்கு ஏன் கசக்கிறது. ஏன் எரிச்சல் படுகின்றனர்.

அதிமுக -பாஜக கூட்டணி வைத்த அன்றே ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டது. 2026 தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி வெற்றி பெறும். 1999 ல் பாஜவுடன் திமுக கூட்டணி வைத்தது. அப்போது பாஜக என்ன கட்சி. நாடகம் போடுகின்றனர். மக்களை திசை திருப்ப ஏதேதோ பேசி மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். ஸ்டாலின் எவ்வளவு அவதாரம் எடுத்து நாடகத்தை அரங்கேற்றினாலும், மக்கள் நம்பப்போவது இல்லை. சட்டசபை தேர்தலில் அதிமுக வரலாற்று ரீதியிலான வெற்றி பெறும்.

அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை போன்றது. மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி. உங்களைப்போன்று வீடு வீடாக சென்று கதவை தட்டி திமுகவில் உறுப்பினராக சேருங்கள் என்று கெஞ்சுகின்ற கட்சி அல்ல. மக்கள் உஷாராக இருக்க வேண்டும். திமுகவினர் வந்து மொபைல் எண் கேட்டால் கொடுக்க வேண்டாம். அவர்கள் ஓட்டுக் கேட்க வரவில்லை. உங்கள் வீட்டில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள மொபைல் எண் கேட்கின்றனர். டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கின்றனர். அதன் மூலம் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்