அம்பேத்கர் பிறந்தநாள்: கட்சியினருக்கு தமிழக வெற்றிக் கழகம் பிறப்பித்த உத்தரவு

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.;

Update:2025-04-13 20:40 IST

கோப்புப்படம் 

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளை கட்சியினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் கழகத் தோழர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று நமது கழகத் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி நாளை (14.04.2025) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தும்படி, கழகத் தோழர்கள் அனைவரையும் கழகத் தலைவர் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்