தர்மபுரியில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் ஊற்றி, தீவைத்து, அவரின் சிலையை அவமதிப்பு செய்த செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கடந்த காலத்தில் தலைவர்கள் சிலை அவமதிப்பு சம்பவம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இதை ஆரம்பத்திலே தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைப் பயன்படுத்தி தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டும். இத்தண்டனையானது தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும்."
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.