வரும் தேர்தலில் துரோகிகளுக்கு அமமுக பாடம் புகட்டும் - டிடிவி தினகரன்
திமுக அரசு, அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவர் உருவாக்கிய விதிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கி விட்டார். புதிய விதிகளை உருவாக்கி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார்.
கட்சியில் இருந்து களையை நீக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். உண்மையில் அவர் துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது உள்ளது அதிமுக இல்லை, எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய கட்சி. வரும் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி, துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமில்லாமல், வரும் தேர்தலில் வெற்றி கூட்டணியாகவும் அமையும்.
தமிழ்நாடு வளர்ச்சி நோக்கி பயணித்து வருகிறது. ஆனால் இன்னமும் இங்கு பலதரப்பு மக்கள் வாழ்வாதாரம் முன்னேறாமல் உள்ளது. திமுக அரசு, அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. கரூர் சம்பவத்தை சில கட்சியினர் அரசியல் ஆக்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.