சீமானுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமானுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் சீமான் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தொடர்ந்து பல்லாண்டு காலம் செயல்பட, வேண்டிக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.