வீட்டில் தனியாக இருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ ஓட்டுநர் கைது

தாய் வேலைக்கு சென்றதை அறிந்து 2 சிறுமிகளுக்கு வினோத் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.;

Update:2025-11-20 19:34 IST

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது 2 மகள்களை வீட்டில் வைத்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர்களின் வீட்டிற்கு அருகில் ஆட்டோ ஓட்டுநர் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிகளின் தாய் வேலைக்கு சென்றதை அறிந்த வினோத், வீட்டில் தனியாக இருந்த 2 சிறுமிகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறுமிகள் தங்கள் தாயிடம் கூறிய நிலையில், அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்