குற்றால அருவிகளில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்: அலைமோதிய கூட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குவிந்து வருகின்றனர்.;

Update:2025-12-14 20:54 IST

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் தற்போது தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.குறிப்பாக தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குவிந்து வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பகுதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.கடந்த ஒரு வார காலமாக தென்காசி பகுதி முழுவதும் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்