பிக்பாஸ் டி.வி. நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்-தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று வேல்முருகன் கூறினார்.;

Update:2025-10-14 17:43 IST

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- விஜய் டி.வி. பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, நீயா நானா முதல் பல்வேறு நல்ல நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க இயலாத வகையில் உள்ளது.

இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். இது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்து உள்ளேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன். கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த நிகழ்ச்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்