‘அ.தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை’ - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் அ.தி.மு.க. வலுவாக உள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-11 13:28 IST

மதுரை,

மதுரையில் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழகத்தில் அ.தி.மு.க. வலுவாக உள்ளது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. கூட்டணி தலைவராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எனவே, அவர் தனது கட்சியைப் பற்றி என்ன சொல்கிறார் என்பது எங்களுக்கு முக்கியம்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. நெருக்கடியில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலம் முழுவதும் பழனிசாமி எங்கெல்லாம் பேரணிகளில் உரையாற்றுகிறாரோ, அங்கெல்லாம் அவரது பேச்சை கேட்க மக்கள் பெருமளவில் திரள்கின்றனர். இது மக்களின் மகத்தான ஆதரவைக் குறிக்கிறது.

மத்திய மந்திரி அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படும் நிகழ்வு குறித்து என்னிடம் முழு தகவல்கள் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கொண்டுவர தயாராக இருக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்