கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.;

Update:2025-07-03 09:12 IST

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் மோப்ப நாயை பயன்படுத்தி கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்