கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு: பயணிகள் வரவேற்பு
சென்னையில் இருந்து செல்லும் ரெயிலில் வரும் 18-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே தினமும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், தற்போது இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மஞ்சள் நிறத்திலான பழைய பெட்டிகளே இணைக்கப்பட்டிருந்தன. தற்போது, சிகப்பு நிறத்தில் எடை குறைந்த எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்கள் 16101/16102) ரெயில் பெட்டிகள் எல்.எச்.பி. (சிகப்பு நிறம்) பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட இருக்கின்றன. சென்னையில் இருந்து செல்லும் ரெயிலில் வரும் 18-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 19-ந் தேதி முதல் இதே பெட்டிகளுடன் ரெயில் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.